Wednesday, 26 April 2023
கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் முளை கட்டிய வெந்தயம்!
Saturday, 7 May 2022
குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்!
சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
Sunday, 20 March 2022
கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்.!
தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.
ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.
கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.
Friday, 18 March 2022
இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கிவிடும்.!
நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் 80 சதவீதம் கல்லீரல் மூலமாகவும், மீதி 20 சதவீதம் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கிறது.
இந்த உணவுகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும்
கொலஸ்ட்ரால் என்பது இரத்த நாளங்கள் மற்றும் உயிரணுக்களில் காணப்படும் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். உடலில் கொலஸ்ட்ரால் இருப்பது சாதாரண விஷயம். இது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும், ஆனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஐந்து உணவுகளை நாம் காண்போம்.
1. ஆப்பிள்: ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக, இது எடை குறைக்க உதவுகிறது.
2. பீன்ஸ்: கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
3. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
4. ப்ளாக் மற்றும் க்ரீன் டீ: ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் விடுபடுகிறது.
5. பூண்டு: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் மூலிகைச் சத்துக்கள் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
Monday, 7 February 2022
வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அலவில் இருக்கிறது.
வேர்க்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும்போது எல்.டி.எல்.ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையை சேர்ந்தது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ"மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
பல்வேறு மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சுரைக்காய்.!
பல்வேறு மருத்துவ பயன்களையும் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும் சுரைக்காயின் பயன்களை பற்றி பார்ப்போம்.
இரும்பு சத்தை அளித்து எலும்புகளை வலுவூட்டுகிறது. நீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும்> தாய்மார்களின் தாய்ப்பால் குடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.
சருமப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கை கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.
நீரழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் மூலம் வெளியாகிறது.
மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தத்தை சமநிலையில் வைக்க முடியும். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குணமாகும் ஆற்றல் கொண்டது.
சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் சிறுநீரக கோளாறுகல் சரியாகும். துளசி இலை மற்றும் புதினா இலையை நன்கு அரைத்து சுரைக்காய் சாற்றுடன் சேர்த்து அருந்தி வருவதன் மூலம் உடல் பருமனை தடுக்கலாம.
தயிருடன் சுரைக்காயை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் நடக்கும் செரிமானம் சீராக நடக்கிறது.
முருங்கை கீரையின் மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.!
முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் நிறைந்து இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் உள்ள இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் முருங்கைக்கீரை உண்டால் நீங்கும்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் மற்றும் உடலில் உள்ள வலிகள் நீங்கும்.