2022 - ஆரோக்கியம்

Saturday, 7 May 2022

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்!

May 07, 2022 0
குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்!

 








சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.

சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.


வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது.


சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.


சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.


முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்


தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.


சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

Sunday, 20 March 2022

கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்.!

March 20, 2022 0
கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்.!

 தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

 
தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

Friday, 18 March 2022

இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கிவிடும்.!

March 18, 2022 0
இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கிவிடும்.!

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் 80 சதவீதம் கல்லீரல் மூலமாகவும், மீதி 20 சதவீதம் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கிறது.

ஆனால் அதன் அளவு அதிகமாக இருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

இந்த உணவுகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும்
கொலஸ்ட்ரால் என்பது இரத்த நாளங்கள் மற்றும் உயிரணுக்களில் காணப்படும் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். உடலில் கொலஸ்ட்ரால் இருப்பது சாதாரண விஷயம். இது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும், ஆனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஐந்து உணவுகளை நாம் காண்போம்.

1. ஆப்பிள்: ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக, இது எடை குறைக்க உதவுகிறது.

2. பீன்ஸ்: கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

3. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

4. ப்ளாக் மற்றும் க்ரீன் டீ: ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் விடுபடுகிறது.

5. பூண்டு: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் மூலிகைச் சத்துக்கள் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

Monday, 7 February 2022

வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

February 07, 2022 0
வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

 

வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அலவில் இருக்கிறது.

வேர்க்கடலை நம் தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயல்முறையிலும் உதவுகிறது.

வேர்க்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும்போது எல்.டி.எல்.ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையை சேர்ந்தது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ"மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

பல்வேறு மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சுரைக்காய்.!

February 07, 2022 0
பல்வேறு மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சுரைக்காய்.!

 பல்வேறு மருத்துவ பயன்களையும் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும் சுரைக்காயின் பயன்களை பற்றி பார்ப்போம்.
















வைட்டமின் பி சி சத்து மிகுந்து காணப்படும் இக்காய் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிப்பது மட்டுமன்றி பற்களில் ஏற்படும் ஸ்கர்வி போன்ற நோய்களை குணமாக்கும் மருத்துவ ஆற்றல் கொண்டது.

இரும்பு சத்தை அளித்து எலும்புகளை வலுவூட்டுகிறது. நீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும்> தாய்மார்களின் தாய்ப்பால் குடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.

சருமப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கை கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

நீரழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் மூலம் வெளியாகிறது.

மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தத்தை சமநிலையில் வைக்க முடியும். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குணமாகும் ஆற்றல் கொண்டது.

சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் சிறுநீரக கோளாறுகல் சரியாகும். துளசி இலை மற்றும் புதினா இலையை நன்கு அரைத்து சுரைக்காய் சாற்றுடன் சேர்த்து அருந்தி வருவதன் மூலம் உடல் பருமனை தடுக்கலாம.

தயிருடன் சுரைக்காயை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் நடக்கும் செரிமானம் சீராக நடக்கிறது.

முருங்கை கீரையின் மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.!

February 07, 2022 0
முருங்கை கீரையின் மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.!

 முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் நிறைந்து இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

















முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன.

முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் உள்ள இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் முருங்கைக்கீரை உண்டால் நீங்கும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் மற்றும் உடலில் உள்ள வலிகள் நீங்கும்.

எளிதில் கிடைக்கும் புதினாவில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள்.!

February 07, 2022 0
எளிதில் கிடைக்கும் புதினாவில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள்.!

 புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

















புதினா இரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீங்கும், பசியை தூண்டும். புதினா அசைவ மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

புதினா மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

புதினாவை நீர் சேர்க்காமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

புதினாக் கீரையானது மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உலர்ந்த புதினா கீரையை பொடி செய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.

உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள கம்பு.!

February 07, 2022 0
உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள கம்பு.!

 கம்பு சாப்பிடுவதன் மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், இது உடலில் உள்ள நச்சுத்தன்மையைக் குறைக்கிறது.

உணவில் கம்பு நிறைந்த உணவுகள் நீரிழிவு நோய் உள்ள மக்களின் சர்க்கரை அளவை 30% குறைகிறது.

















கம்பு தினை நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். ஆகையால், இது செரிமானத்திற்கு எளிதில் உதவும். மேலும் இதில் அதிக அளவு இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது

கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த கம்பு சிறந்த வழி என்று அறியப்படுகிறது. உடற்கொழுப்பு பிரச்சினைகள் உள்ள நோயாளிகளால் கம்பு ரொட்டியை உட்கொள்ளலாம். ஏனென்றால் இது நிறைய நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது இரத்த ஓட்டத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவிக்கரமாக இருக்கிறது.

ஒரு நாளில் 30 கிராம் கம்பு உட்கொள்வதன் மூலம், பெண்கள் மார்பக புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஐம்பது சதவீதம் குறைக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் புற்று நோய் தடுக்க உதவுகின்றன, அதிலும் குறிப்பாக கம்பு மார்பக புற்று நோய்க்கு எதிராகச் சிறந்து வேலைசெய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கம்பில் அதிக அளவு புரதம் உள்ளது. தசை வளர்ச்சிக்கு உதவுவதால் புரதங்கள் உடலின் வலுவான தோற்றத்திற்குச் சிறந்தது என்று கூறப்படுகின்றன.

கம்பு மாவு தசை மண்டலத்தை வலிமையாக்க ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் தசைகள் காலப்போக்கில் மெலிந்ததாகவும் வலுவாகவும் மாற உதவுகிறது.

பிரவுன் ரைஸ் - சிகப்பு அரிசியின் நன்மைகள்...!

February 07, 2022 0
பிரவுன் ரைஸ் - சிகப்பு அரிசியின் நன்மைகள்...!

 














பிரவுன் ரைஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிவப்பு அரிசியை, தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் கூறுவர்.

சிகப்பு அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சிவப்பு அரிசியில் நார் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்டராலின் அளவை குறைத்து ரத்தத்தை சீராக்கும் திறன் கொண்டது.

இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.

வைட்டமின் B6 நிறைந்தது. இருதய நோய்களை தடுக்க உதவும். மெக்னீசியம் நிறைந்தது. வலுவான எலும்புகளை உருவாக்கும். மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.

சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

சிகப்பு அரிசியில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.


வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என சமைக்கலாம்.

புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

இளநீரின் நன்மைகள்.!

February 07, 2022 0
இளநீரின் நன்மைகள்.!







 

உலக அளவில் தென்னை வளர்ப்பில் இந்தியா 3-ம் இடத்தை வகிக்கிறது.

தென்னையானது 56 சதவீதம் இளநீருக்காகவும், 44 சதவீதம் தேங்காய் எண்ணை மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியா உஷ்ணம் மிகுந்த நாடாகும். அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முதன்மை இடம் வகிக்கின்ற இளநீர் தென்னையில் இருந்து தான் பெறப்படுகிறது.

நோய்களை தடுக்கும் இளநீர்

இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு.

மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது. இவ்வாறு பலவகைகளில் பயன்படும் தென்னையை நடும்போது இளநீருக்காக மட்டும் உள்ள தென்னை மரங்களை மட்டும் சாகுபடி செய்யாமல், இளநீர் மற்றும் தேங்காய்க்கு பயன்படும் திருவையாறு-2 என்ற ரக தென்னம்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம்.

இதன் மூலம் தென்னை விவசாயிகள் நல்ல இலாபம் பெறலாம். கோடைகால வியாதிகளை தடுக்கக்கூடிய இளநீரை நாம் பருகி நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

நச்சு நீக்கி

நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது.

குறைந்த இரத்த அழுத்தம்

இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது.

தீக்காய நிவாரணி

தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது.

எடை இழப்பு

இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது.

Friday, 28 January 2022

செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

January 28, 2022 0
செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!
அடிக்கடி பசி உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் பசி உணர்வை தவிர்த்து நல்ல ஊட்டத்தை தரக்கூடிய மருந்தாக மாறுகிறது.

பிரசவ காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உற்ற நண்பனாக இருக்கிறது . வளரும் சிசுவிற்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய பசி உணர்வை சரிசெய்து அவர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

செவ்வாழை பழத்தில் அதிக அளவு கால்சியம் சத்து அதிக அளவு காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு அதிக கால்சியம் சத்து தேவைப்படும். அப்பொழுது தாயின் உடலின் எலும்புகளில் இருந்து போதுமான சத்துக்களை உறிஞ்சுகிறது, அந்த சத்துக்களை செவ்வாழை பழம் சாப்பிடுவதால் அதிக அளவு கிடைக்கிறது.

செவ்வாழை பழம் எடுத்துக்கொள்ளும்போது அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை அது தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகைக்கு செவ்வாழை பழம் ஒரு தீர்வாக அமைகிறது. செவ்வாழை பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகையை சரிசெய்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செவ்வாழை பழம் உதவுகிறது, செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் காணப்படுவதால் அவை இரத்தத்தில் சோடியம் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சர்க்கரை பிரச்சினையை சரி செய்யும் அருமருந்தாக செவ்வாழை பழம் விளங்குகிறது. முக்கியமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

Thursday, 27 January 2022

ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் !!

January 27, 2022 0
ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் !!
வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.

பப்பாளி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.

பப்பாளி சாப்பிடுவது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பப்பாளி பழம் மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.

Tuesday, 25 January 2022

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

January 25, 2022 0
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!
நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளை உறுதியாக்கும். கல்லீரலில் இருக்கும் கிருமிகளை அழித்து நலம் பயக்கக்கூடியது.

 நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கிறது

வாரம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் பளப்பான சருமத்துடன் முகமும் பொலிவுடன் இருக்கும். இது செல்களை புத்துணர்வு பெறவைத்து, ரத்த ஓட்டத்தை தூண்டிவிடுவதால் தோலில் சிருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளமையுடன் இருக்க உதவுகின்றது.

நெல்லிக்காய் சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. நெல்லிக்காய் வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

நெல்லிக்காய் பொடியை தயிருடன் கலந்து தலையின் ஸ்கால்பில் தடவி வந்தால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். பொடுகுத் தொல்லையும் நீங்கும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்சர் நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தி விடலாம்.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும், சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் ஜாம் என பலவிதமாக நாம் சாப்பிட்டு வருவதால் உடல் ஆரோக்கியம் பெருகும்.

Sunday, 23 January 2022

எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ள கொத்தமல்லி.!

January 23, 2022 0
எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ள கொத்தமல்லி.!
கொத்தமல்லி தழையில் வைட்டமின் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன.
மனிதனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது. இது வாயு பிரச்சனையை குணமாக்கும்.

கொத்தமல்லி தழையை தினமும் உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது எலும்பு, நரம்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியை தூண்டும் ஒரு மூலிகையாகும்.

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபைல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை ஜுஸ் செய்து பருகலாம்.

கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தையானது ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி அடையும்.

கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால் மாலை கண்நோய் குறை நீங்கும். கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

கண்பார்வை பிரகாசமாகும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு உணவில் கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் மாலை கண்நோய் குறை நீங்கும்.

கொத்தமல்லி கீரையில் ஏ, பி, சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.

Thursday, 20 January 2022

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

January 20, 2022 0
அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும்.

அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். மேலும் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

Monday, 17 January 2022

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பனங்கற்கண்டு.!

January 17, 2022 0
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பனங்கற்கண்டு.!
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் சுலபத்தில் கரையும். சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.

ஜுரங்களில் டைபாய்டு, வைரல் சுரம் மற்றும் உடலின் நுரையீரலில் ஏற்படும் நீர்க்கட்டு போன்ற வியாதிகளை போக்குவதில் பனங்கற்கண்டு சிறப்பாக செயல்படுகிறது.

உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

ஜலதோஷ பாதிப்பால் சிலருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சனையை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.

ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

பனங்கற்கண்டுகளை கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணமாகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

Sunday, 16 January 2022

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் !!

January 16, 2022 0
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் !!
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது, இரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சு க்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும்பொழுது, உடலுக்கு தேவையான பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்கப் பெற்று உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி உடல் சூடு, உடல் வறட்சி, அதிக தாகம், பித்த நோய்கள் போன்றவற்றை தீர்க்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை உள்ளதால் யூரிக் அமிலத்தை வெளியேற்றி எலும்புகளை பாதுகாக்கிறது.

சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.

வெள்ளரிக்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதால், சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

வெள்ளரிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் நிறைந்து இருப்பதால், இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெள்ளரிக்க்காயினை சாப்பிட்டு வருவது சிறந்தது.

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையய் போக்கும்.

Wednesday, 12 January 2022

கண்பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் !!

January 12, 2022 0
கண்பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் !!
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோய் குணமாகும்.
 
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.

கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.

கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும். கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் திடனாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.

Tuesday, 11 January 2022

சீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.!

January 11, 2022 0
சீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.!
தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.

சீரகத்தில் வைட்டமின் ஏ மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது.

சீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது. சீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது.

சிலருக்கு எதையும் சீக்கிரத்தில் மறந்து விடும் நிலை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஜீரக தண்ணீரை பருகி வந்தால் ஞானசக்தி அதிகரிக்கும்.

உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஜீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியையும் மீட்டு தரும்.

Monday, 10 January 2022

அற்புத மருத்துவ பலன்களை அள்ளித்தரும் சுக்கு !!

January 10, 2022 0
அற்புத மருத்துவ பலன்களை அள்ளித்தரும் சுக்கு !!
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் மிளகு !!

January 10, 2022 0
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் மிளகு !!

 மிளகு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே "பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்றார்கள் முன்னோர்கள்.










மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும், ஆரம்பக்கட்டப் பிரச்சினையை எதிர்த்துச் செயல்படும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளைக்கு அரை ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாவதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்துவர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்திவந்தால், விஷக்கடிகள் முறிந்துவிடும்.

மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடிபோல் மூக்கில் உறிஞ்சினாலும் தலைவலி தீரும்.

Sunday, 9 January 2022

உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த பழங்களை சாப்பிடாதீங்க.!

January 09, 2022 0
உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த பழங்களை சாப்பிடாதீங்க.!
இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

எடையைக் குறைப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் டயட்டுடன், உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இதனால் பல நேரங்களில் எடையைக் குறைக்க முயலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உடற்பயிற்சியுடன், டயட்டையும் தொடங்குகிறார்கள். ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு அது முடியாமல் பழையவாறு மாறிவிடுகிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். எடுத்த உடனேயே கடினமாக முயற்சிக்காமல், படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, முதலில் உடல் எடையை அதிகரிக்கத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக டயட்டின் போது ஃபுரூட் சாலட் சாப்பிடுவார்கள். அந்த ஃபுரூட் சாலட் தயாரிக்க தேவையான பழங்கள் பார்த்து கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சில பழங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் பல பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான கலோரி அதிகம் நிறைந்த பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் அது எடை இழப்பிற்கு சற்று உதவியாக இருக்கும். இப்போது எடையைக் குறைக்க வேண்டுமானால் எந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.


அன்னாசிப்பழம்
 
அன்னாசி மிகவும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் எடையைக் குறைக்க நினைப்போர் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. இயற்கையாகவே அன்னாசி மிகவும் இனிப்பானது. இதில் உள்ள கலோரிகளால் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே இந்த பழத்தை அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் உட்கொள்ளக்கூடாது.

அவகேடோ
 

பொதுவாக உடல் எடையைக் குறைக்கும் போது அதிக கலோரி நிறைந்த பழங்கள் மற்றும் பிற உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அவகேடோ பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளன. ஒரு 100 கிராம் அவகேடோ பழத்தில் 160 கலோரிகள் உள்ளன. அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் உள்ளது. ஆகவே இப்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், குறைவான அளவில் சாப்பிடுங்கள்.

திராட்சை
 

திராட்சையில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, மிகக்குறைவான அளவிலேயே திராட்சையை சாப்பிட வேண்டும். 100 கிராம் திராட்சையில் 67 கலோரிகள் மற்றும் 16 கிராம் சர்க்கரை உள்ளது. ஆகவே நீங்கள் டயட்டில் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு திட்டத்தில் இடையுறை ஏற்படுத்தலாம்.

வாழைப்பழம்
 

பழங்களில் வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மற்றும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம். ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமாக இருக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 2-3 வாழைப்பழங்களை சாப்பிட்டால், அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாம்பழம்
 

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமும் கூட. ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், 1-2 துண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழத்தில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. ஆகவே இது உங்களின் எடை இழப்பு திட்டத்தை அழிக்கலாம்.

லிச்சி
 

பிங்க் நிறத் தோலைக் கொண்ட லிச்சி பழம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான பழமும் கூட. ஆனால் ஒரு கப் லிச்சியில் 29 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின், லிச்சியை உங்கள் டயட்டில் சேர்ப்பது நல்ல யோசனையல்ல.