March 2022 - ஆரோக்கியம்

Sunday, 20 March 2022

கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்.!

March 20, 2022 0
கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்.!

 தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

 
தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

Friday, 18 March 2022

இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கிவிடும்.!

March 18, 2022 0
இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கிவிடும்.!

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் 80 சதவீதம் கல்லீரல் மூலமாகவும், மீதி 20 சதவீதம் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கிறது.

ஆனால் அதன் அளவு அதிகமாக இருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

இந்த உணவுகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும்
கொலஸ்ட்ரால் என்பது இரத்த நாளங்கள் மற்றும் உயிரணுக்களில் காணப்படும் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். உடலில் கொலஸ்ட்ரால் இருப்பது சாதாரண விஷயம். இது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும், ஆனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஐந்து உணவுகளை நாம் காண்போம்.

1. ஆப்பிள்: ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக, இது எடை குறைக்க உதவுகிறது.

2. பீன்ஸ்: கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

3. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

4. ப்ளாக் மற்றும் க்ரீன் டீ: ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் விடுபடுகிறது.

5. பூண்டு: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் மூலிகைச் சத்துக்கள் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.